உலகம்

ஒரே குத்தில் இந்திய வம்சாவளியினரைக் கொன்ற நபர்: அதிரவைத்த சம்பவம்

Published

on

ஒரே குத்தில் இந்திய வம்சாவளியினரைக் கொன்ற நபர்: அதிரவைத்த சம்பவம்

அமெரிக்காவில், தங்கும் வசதிகொண்ட உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியினர் ஒருவரை, ஒரே குத்தில் கொன்றுள்ளார் ஒருவர்.

அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் அமைந்துள்ள உனவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்தவர் ஹேமந்த் மிஸ்த்ரி (59). ஹேமந்த், இந்தியாவிலுள்ள குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

கடந்த வார இறுதியில், உணவக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவரை வெளியே போகச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, எதிர்பாராத நேரத்தில் அந்த நபர் ஹேமந்த் முகத்தில் ஓங்கிக் குத்த, அப்படியே சரிந்து கீழே விழுந்துவிட்டார் ஹேமந்த். விழுந்தவர் எழவேயில்லை!

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையிலும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் உயிரிழந்துவிட்டார் ஹேமந்த்.

ஹேமந்த் தாக்கப்படும் காட்சிகளை ஒருவர் வீடியோ எடுத்துள்ள நிலையில், தாக்குதல்தாரியைபொலிசார் விரைவாக கைது செய்துவிட்டார்கள்.

அவர் பெயர் ரிச்சர்ட் (41) என தெரியவந்துள்ளது. ரிச்சர்ட் மீது தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹேமந்த் உயிரிழந்துவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு கொலைக்குற்றச்சாட்டாக மாற்றப்பட உள்ளது.

Exit mobile version