உலகம்

கென்யாவில் வலுப்பெற்ற மக்கள் போராட்டம் : நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

Published

on

கென்யாவில் வலுப்பெற்ற மக்கள் போராட்டம் : நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

கென்யாவின்(Kenya) தலைநகர் நைரோபியில் வரி விதிப்புக்கு எதிராக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் இருக்கும் வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து நாடாளுமன்றம் அருகே பொலிஸ் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கூட்டத்தை கலைக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் துப்பாக்கி பிரயோகத்தில் நான்கு போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டதாகக் கூறிய ஒரு மனித உரிமை அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அது உறுதிச்செய்யப்படவில்லை.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று(25.06.2024) காலை முதல் பொலிஸாருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்,

பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை கலைக்க ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

பொதுமக்கள் விரும்பாத வரி திட்டங்களை அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய நிதி யோசனையை நாடாளுமன்றம் நிறைவேற்றிய நிலையிலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் கடன் சுமையை குறைக்க வரி விதிப்பு அவசியம் என்று அரசாங்கம் நியாயம் கூறியுள்ளது.

Exit mobile version