உலகம்

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

Published

on

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஜப்பான் (Japan) சென்றுள்ளார். இந்நிலையில் அவர் பயணம் செய்த, நியூசிலாந்து (New Zealand) தற்காப்புப் படைக்குச் சொந்தமான போயிங் 757 ரக விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) தரையிறங்கியபோது அது எதிர்பாராத விதமாக செயலிழந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அவர் வர்த்தக விமானமொன்றில் ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், நியூசிலாந்து தற்காப்புப் படையிடம் உள்ள இரண்டு போயிங் 757 ரக விமானங்களும் 30 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்றும் அதனால் அவற்றின் நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version