உலகம்

மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 6 யாத்திரிகர்கள் உயிரிழப்பு

Published

on

மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 6 யாத்திரிகர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 6 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கா வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த 6 பேரும் ஜோர்தான் நாட்டவர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சவுதி அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஹஜ்ஜில் 1.8 மில்லியன் யாத்திரிகர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Exit mobile version