உலகம்

கனடாவில் அறிமுகமாகவுள்ள புதிய இனவாத எதிர்ப்பு வியூகம் : கமல் கேரா

Published

on

கனடாவில் அறிமுகமாகவுள்ள புதிய இனவாத எதிர்ப்பு வியூகம் : கமல் கேரா

கனடாவில் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மத்திய அரசின் தலைமையை வலுப்படுத்தும் நோக்கோடு கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கு பொறுப்பான அமைச்சர் கமல் கேரா கனடாவின் புதிய இனவெறி எதிர்ப்பு உத்திகள், மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள், மற்றும் இவற்றை உள்ளடக்கிய கனடாவின் இனவெறி எதிர்ப்பு வியூகத்தை வெளியிட்டுள்ளார்.

ரொறன்ரோ நகரில் உள்ள பொது அமைப்பு ஒன்றின் தலைமை அலுவலகத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,’கனேடிய சமூகத்தில் உள்ள பழங்குடி மக்கள், கறுப்பின, இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்களின் முழு சமூக மற்றும் பொருளாதார பங்கேற்பை முறையான இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது.

இனவெறி மற்றும் பாகுபாடு பொதுவான மதிப்புகளை பாதிப்படையச் செய்கிறது, அத்துடன் நடைமுறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இன்னும் ஆழத்துக்குக் கொண்டு செல்கிறது.

மற்றும் கனடாவில் உள்ள தனிநபர்களின் அன்றாட வாழ்க்கையில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது, மேலும் அந்த தாக்கங்கள் தலைமுறைகள் தலைமுறைகளாக தொடர்ந்து செல்வதை நாம் உணரவும் முடிகிறது” கனடாவின் புதிய இனவெறி எதிர்ப்பு உத்தியானது, 70 க்கும் மேற்பட்ட கூட்டாட்சி முன்முயற்சிகளை உள்ளடக்கியது,

இதன் மூலம் கனடாவின் மத்திய அரசு தற்போது இயக்க முறைமையை மாற்றுவதையும் சமூகங்களுக்குள் ஆதரவான தாக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கான மானிய நிதியாக 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடும் இதில் அடங்கும் என்றார் . அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் “இனவெறியை எதிர்த்துப் போராடுவதில் நிபுணர்களாக சமூகங்களை ஆதரிக்கும், முழு கூட்டாட்சி பொதுச் சேவைக்கும் இனவெறி எதிர்ப்பு கட்டமைப்பை நிறுவுதல் அவசியம் என்பதை எமது அரசு உணர்ந்துள்ளது.

இதன் மூலம் புதிய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வழங்குதல், கூட்டாட்சி இனவெறி எதிர்ப்பு செயலகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் இனவெறியின் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்” என தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய கனடாவின் பழங்குடியினர் மற்றும் -சுதேசிகள் சார்ந்த உறவுகளுக்கு பொறுப்பானஅமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அங்கு உரையாற்றுகையில் “கனடாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட இனவெறி எதிர்ப்பு மூலோபாயத்தின் மூலம் இனவெறியை ஒழிப்பதற்கான அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

வெறுப்பு மற்றும் அமைப்பு ரீதியான இனவெறி எங்கிருந்தாலும், எது எப்படி இருந்தாலும், இந்த நாட்டில் உள்ள பழங்குடியினர் மற்றும் , கறுப்பின மற்றும் இனவாதத்தை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், எது சரியானது என்பதற்கும் பாதுகாப்பாக நாங்கள் இருப்போம்” என்று உறுதியளித்தார்.

Exit mobile version