உலகம்

பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி!

Published

on

பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி!

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் மனைவி பதவியேற்ற அடுத்த நாளிலே ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியானது வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

இவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பின்னர், நேற்று சட்டமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை கிருஷ்ண குமாரி ராய் ராஜினாமா செய்தார். இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

இவரது ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.

அருணாசலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பீமா காண்டு பதவியேற்பு விழாவில் பிரேம் சிங் தமங் பங்கேற்க சென்ற நிலையில் அவரது மனைவி ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version