உலகம்

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம்

Published

on

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம்

டி20 உலகக் கோப்பை நடத்தப்பட்ட நியூயாா்க் – நசாயு கிரிக்கெட் மைதானம் முற்றுமுழுதாக அகற்றப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், சமனற்ற ஆடுகளத்தைக் கொண்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இந்த மைதானம் காணப்பட்டது.

இந்நிலையில், இந்த மைதானத்தில் அட்டவணையிடப்பட்ட ஆட்டங்கள் நிறைவடைந்ததால், அது முற்றிலும் அகற்றப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகக் கோப்பை போட்டிக்காக இந்த மைதானத்தை ஐசிசி 2023 இல் இறுதி செய்த நிலையில், வெறும் 106 நாள்களில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

34,000 போ் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் பிரதானமாக 4, பயிற்சிக்காக 6 என 10 செயற்கை ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version