உலகம்
சுற்றிவளைக்கும் இஸ்ரேலிய டாங்கிகள்… மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்ளும் மக்கள்
சுற்றிவளைக்கும் இஸ்ரேலிய டாங்கிகள்… மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்ளும் மக்கள்
ரஃபா நகரத்தை இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் சுற்றிவளைத்துவரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்கும் மக்கள் மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஃபா பகுதியை ஹெலிகொப்டர், ட்ரோன் மற்றும் ராணுவ டாங்கிகளால் இஸ்ரேலிய ராணுவம் தீவிரமாக தாக்கி வருகிறது. மட்டுமின்றி, ரஃபா நகரம் இதுவரை எதிர்கொண்டிராத மிக மோசமான தாக்குதல் இதுவென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நெருக்கடியான சூழலில் அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் அல்லது குடியிருப்பு வசதிகள் ஏதுமற்ற பகுதிக்கு தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவின் ஆயுத விநியோகத்தை நிறுத்துவேன் என்று ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
ஆனால், திட்டமிட்டபடியே தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அமைச்சரவையும் முடிவு செய்துள்ளது. ரஃபா தொடர்பில் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ஆயுத விநியோகத்தை குறைக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாங்கள் போராடி வருவதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளன.