இந்தியா
அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்
இந்தியாவின் தொழில் துறையில் முன்னிலையில் இருக்கும் அம்பானி குடும்பம், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டமான “வந்தாரா”வில்(Vantara) பிரபல நடிகர்கள் அஜய் தேவ்கன், பூமி படேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற வீடியோ பிரச்சாரத்தை தொடங்கியது.
நான்வந்தாரியன் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ, நம் பூமியைக் காப்பாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
மறுபயன்பாடு செய்யக்கூடிய குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துதல், மரங்களை நடுதல், குறுகிய தூர பயணங்களுக்கு சைக்கிளை தேர்ந்தெடுப்பது போன்ற எளிய பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என இந்த வீடியோ மூலம் பிரபலங்கள் மக்களை ஊக்குவிக்கின்றனர்.
வீடியோ பிரச்சாரம் மட்டுமின்றி, ஜாம்நகரில் உள்ள தங்கள் தலைமையகத்தில் 5000 மரங்களை வந்தாரா அமைப்பு நட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 10 லட்சம் மரங்களை நடும் என்ற உறுதிப்பாட்டையும் வந்தாரா அளித்துள்ளது.