உலகம்

பிரித்தானியாவில் அதிகரித்த தங்க விலை: பிரபல நிறுவனம் தீர்மானம்

Published

on

பிரித்தானியாவில் அதிகரித்த தங்க விலை: பிரபல நிறுவனம் தீர்மானம்

பிரித்தானியாவில் (Britain) தங்க விலை அதிகரிப்பு காரணமாக Rolex நிறுவனம் தனது கைக்கடிகாரங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

குறித்த தகவலை அந்த நிறுவனம் தனது பிரித்தானிய இணையதளத்தில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, in white gold rose நிறத்தில் உள்ள Rolex Daytona chronograph கடிகாரத்தின் விலை 4 சதவீதம் உயர்ந்து 37,200 பௌண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், Rolex GMT-Master II Yellow Gold கடிகாரத்தின் விலை 34,000-லிருந்து 35,400 பௌண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் கடிகார தாயாரிப்பு நிறுவனமான Rolex இன் கடிகார விலைகள், ஒரு நாட்டின் பொருளாதார வலிமையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

அத்துடன், உலக புகழ் பெற்ற கடிகார நிறுவனமான தாயாரிப்பு நிறுவனமான Rolex வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது.

இதேவேளை, அவை அனைத்தும் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ( இலங்கை ரூ.3,33,046 கோடி) விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version