உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Published

on

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) ஜூன் 15 சனிக்கிழமை முதல் வெளிப்புற வேலையாட்களுக்கான கட்டாய மதிய இடைவேளையை அறிவித்துள்ளது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வது மதியம் 12:30 முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படாது மற்றும் செப்டம்பர் 15 வரை குறித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கோடை வெப்ப அபாயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, அதன் ஒருங்கிணைந்த தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 20வது ஆண்டாக மதிய இடைவேளையை நடைமுறைப்படுத்துகிறது.

இடைவேளையின்போது ஊழியர்களுக்கு நிழலான பகுதி வழங்கப்பட வேண்டும் மற்றும் தினசரி வேலை நேரம் காலை, மாலை அல்லது இரண்டு நேரமும் எட்டு மணிநேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும்.

விதிகளை மீறும் முதலாளிகள் ஒரு தொழிலாளிக்கு திர்ஹாம் 5,000 அபராதம், அதிகபட்சமாக 50,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய இடைவேளைக் கொள்கையில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், “600 590 000” என்ற எண்ணில் அதன் அழைப்பு மையம் மூலம் புகார் அளிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version