உலகம்
பயங்கரவாத குற்றவாளிகள் 8 பேருக்கு ஈராக் தண்டனை
பயங்கரவாத குற்றவாளிகள் 8 பேருக்கு ஈராக் தண்டனை
பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரை ஈராக் (Iraq) தூக்கிலிட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றவாளிகளை ஈராக்கியர்கள் நசிரியா நகரில் உள்ள அல்-ஹட் சிறையில் “நீதி அமைச்சகக் குழுவின் மேற்பார்வையில்” தூக்கிலிடப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “ பயங்கரவாதம்” என்று குற்றம் சாட்டப்பட்ட ஈராக்கியர்களுக்கு நீதிமன்றங்கள் சமீப ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைகளை வழங்கியுள்ளன.
இதன்படி, ஈராக் சட்டத்தின் கீழ், பயங்கரவாதம் மற்றும் கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும், மேலும் மரணதண்டனை ஆணைகள் அதிபரால் கையொப்பமிடப்பட வேண்டும்.
இந்நிலையில், “பயங்கரவாத குற்றவாளிகள் மற்றும் இஸ்லாமிய அரசு குழுவைச் சேர்ந்தவர்கள்” என்று எட்டு பேரை தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த நபர்கள் “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ்” தூக்கிலிடப்பட்டுள்ளனர்.