உலகம்

காசாவில் நிரந்தர அமைதி: ஜோ பைடன் அறிவிப்பு

Published

on

காசாவில் நிரந்தர அமைதி: ஜோ பைடன் அறிவிப்பு

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இதுவெனவும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரானது, பல மாதங்களாக நீடித்து வருகிறது, கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கர தாக்குதல்களை நடத்தியதுடன் பலரை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இன்றுவரை காசாவில் தாக்குல்களை நடத்திய வருகிறது.

அத்துடன், இந்த போர் காரணமான எண்ணற்ற மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரகணக்கிலான பெண்கள் குழந்தைகள் உட்பட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளது.

Exit mobile version