உலகம்

விதிகளால் மாற்றமடைந்த சுவிஸ் குடியுரிமை

Published

on

விதிகளால் மாற்றமடைந்த சுவிஸ் குடியுரிமை

சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளமையால் எதிர்வரும் காலங்களில் அதை சுவிஸ் குடியுறிமை பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுவிஸ் நாட்டவர் ஒருவரை மணந்திருந்தாலோ அல்லது சுவிஸ் நாட்டவருக்கு பிறந்திருந்தாலோ அன்றி, உங்களுக்கு சுவிஸ் குடியுரிமை கிடைப்பது எளிதான விடயம் அல்ல என குறித்த ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.

அத்துடன், மொழிப்புலமை அவசியம். அதிலும் பரீட்சையின்போது கேட்கப்படும் கடினமான கேள்விகளுக்கு பதிலளிப்பதும் சவாலான ஒரு விடயம் என குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், சுவிஸ் குடியுரிமை உண்மையாகவே Golden passport ஆக மாறிவிட்டதாக குறிப்பிடப்படுகிறது.

சுவிஸ் குடியுரிமைக்கான மொழித்தேர்வுகளில், பேசுவதில் B1 மட்டத்திலும், எழுதுவதில் A2 மட்டத்திலும் புலமை பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த மட்டத்தை எட்டுவது பலருக்கும் கடினமான விடயம் எனவும் குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version