உலகம்

இப்ராஹீம் ரைசிக்கு நேர்ந்த விபத்து : புலனாய்வாளர்களின் அறிக்கை

Published

on

இப்ராஹீம் ரைசிக்கு நேர்ந்த விபத்து : புலனாய்வாளர்களின் அறிக்கை

ஈரானின் ஜனாதிபதி உட்பட பலர் உயிரிழந்த விபத்து தொடர்பாக ஈரானிய இராணுவம் தனது முதல் விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

விமானக் குழுவினருக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையிலான உரையாடல்களில் சந்தேகத்திற்குரிய எந்த விடயமும் இடம்பெறவில்லை புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இதில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர்.

சீரற்ற காலநிலையே விபத்துக்குக் காரணம் என மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அசாதாரண வானிலை எதுவும் இல்லை என்று மற்றொரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

உலங்கு வானூர்தி திட்டமிட்ட பாதையில் சென்று கொண்டிருந்த போது மலையில் மோதி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இடிபாடுகளில் துப்பாக்கிச்சூடு தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு 90 வினாடிகளுக்கு முன்பு விமானி குழுவில் உள்ள மற்ற இரண்டு உலங்குவானூர்திகளுடன் தொடர்பு கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானக் குழுவினருக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த உரையாடலில் அசாதாரணமான எதுவும் கேட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version