உலகம்

ஜேர்மனியில் குழந்தையுடன் ரயில் தண்டவாளத்தில் இறங்கிய இளம்பெண்: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்

Published

on

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், குழந்தையுடன் தண்டவாளத்தில் இறங்கிய இளம்பெண் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று மாலை 6.20 மணியளவில், ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் தண்டவாளத்தில் இறங்கியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வேகமாக வந்த ரயில் அவர் மீது மோத, உடனடியாக உதவிக்கு ஹெலிகொப்டர் ஒன்று வர, அவரை சோதித்த மருத்துவ உதவிக்குழுவினர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தை படுகாயமடைந்த நிலையில் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், அந்தப் பெண் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் இறங்கியதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியில் இருக்கும் 16 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version