உலகம்
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வரும் நிலையில் அந்த 3 நாடுகள் இம்முடிவை அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பையடுத்து, நோர்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு எதிரானதோ அல்லது ஹமாஸுக்கு ஆதரவளிப்பதோ அல்ல என்றும், காசா பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக என்றும் ஸ்பெயின் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தவிர, 140 உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக இதுவரை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.