உலகம்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானின் புதிய திட்டம்

Published

on

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானின் புதிய திட்டம்

பாகிஸ்தான் நாடு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகிறது. அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலை உச்ச எட்டியுள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை பெற்றுள்ளது.

ஆனால் நெருக்கடியை சமாளிக்க போராடும் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ‘பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்’ (PIA) நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PIA கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை சந்தித்துள்ளது. இது அரசாங்கத்தின் சொந்த பாரிய நிறுவனம் ஆகும்.

Exit mobile version