உலகம்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

Published

on

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் திகதியை அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் திகதியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேற்று அறிவித்தார்.

அதன்படி பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பொதுத் தேர்தல் அறிவிப்பை தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டிற்கு தேவையான மற்றும் சரியான தருணத்தில் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், எங்களின் ஜனநாயகத்தின் வலிமையால் அதிகாரம் மக்களிடம் திரும்பும், இந்த தேர்தல் உங்கள் எதிர்காலத்தை மாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் பற்றியது, அத்துடன் பிரித்தானியர்களிடம் நாட்டை உழைக்கும் மக்களின் சேவைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் சர் கீர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version