உலகம்

ஈரான் அதிபரின் மரணம்: தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயரும் அபாயம்

Published

on

ஈரான் அதிபரின் மரணம்: தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயரும் அபாயம்

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிகடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவருடன் வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன், அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளும் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது அவர்களுக்கான இறுதிசடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இவர்களின் மரணம் உலகளவில் பெரிதளவிலான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அதிபர் மரணத்தை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை(20) சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

அதாவது WTI கச்சா எண்ணெய் விலையானது 0.41% அளவுக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.48% அளவுக்கும் ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

இதில் இந்தியாவானது, ஈரானிடம் இருந்து தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% மான எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

மேலும்,ஈரானிடம் இருந்து உலர் பழங்கள், இரசாயனங்கள், கண்ணாடி பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருவதுடன் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஈரானில் தற்போது இருக்கும் நிலைமையின் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்தும் உருவாகியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் ரைசியின் மரணத்தால் பங்குச் சந்தையில் நிலைமையிலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது இதனால், முதலீட்டார்கள் தங்கத்தை நோக்கி சென்றுவிட்டதால், அதற்குரிய கேள்வியும் அதிகரித்து தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

ஈரானில் ஒரு நிலையான தலைமை உருவாகும் வரை இந்த நிலைமை மாறாது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version