உலகம்

நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கை : ஆதரவு தெரிவித்த இரு ஐரோப்பிய நாடுகள்

Published

on

நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கை : ஆதரவு தெரிவித்த இரு ஐரோப்பிய நாடுகள்

இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனப் பகுதியில் பல மாதங்களாக அதிகரித்து வரும் வன்முறையின் ஒரு பகுதியாக ஜெனினில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க ஆதரவு எழுந்துள்ளது.

முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதற்கு காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் காலண்ட் ஆகியோருக்கு எதிராக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் இந்த முயற்சியைக் கண்டித்த நிலையில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகள் கைது செய்வதற்கான உத்தரவு கோரிக்கையை ஆதரிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் எந்த சூழலிலும் தண்டனை பெறாதவர்களுக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் மதிக்கிறது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version