உலகம்

துருக்கியை அடுத்து ரஷ்யாவும் ஈரான் ஜனாதிபதி தொடர்பில் தீவிரம்

Published

on

துருக்கியை அடுத்து ரஷ்யாவும் ஈரான் ஜனாதிபதி தொடர்பில் தீவிரம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தேவையான அனைத்து உதவிகளும் முன்னெடுக்க தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்திருந்தது.

தற்போது ரஷ்யாவும் உதவ முன்வந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி தொடர்பில் தகவல் வெளியானதும், தமக்கு துக்கத்தை ஏற்படுத்தியதாக துருக்கியின் எர்டோகன் தெரிவித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகள் அனைத்தையும் முன்னெடுக்க துருக்கி தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடும் மூடுபனியால் சூழப்பட்ட மலைப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஈரானிய மீட்பு குழுக்கள் முன்னெடுத்துள்ளனர். 63 வயதான ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டரே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் தங்களின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை துருக்கியிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி அரசாங்கம் இரவு நேரத்தில் பணியாற்றக்கூடிய நிபுணர்கள் குழு ஒன்றை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

மட்டுமின்றி 32 பேர்கள் கொண்ட சிறப்பு நிபுணர்கள் குழு ஒன்றையும் துருக்கி களமிறக்கியுள்ளது. ஏற்கனவே அஜர்பைஜான், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஈரானுக்கு தங்கள் உதவியை வழங்க முன்வந்துள்ளன.

தற்போது ரஷ்யாவும் தேடுதல் நடவடிக்கையில் களமிறங்க ஆயத்தமாக உள்ளதாகவும், ஈரானின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஈரான் முழுவதும் மக்கள் ஜனாதிபதி ரைசி தொடர்பில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version