உலகம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

Published

on

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

ஈரான் உலங்கு வானூர்தி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.

கடினமான வானிலையிலும் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து உடல்களை மீட்டுள்ளனர்.

ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான INRA உறுதிப்படுத்தியுள்ளது.

”ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் மற்றும் அவருடன் பயணித்த அரச உயர் அதிகாரிகள் சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் வீரமரணமடைந்துள்ளார்” என INRA அறிக்கை வெளியிட்டுள்ளது.

சளைக்க முடியாத மற்றும் கடின உழைப்பாளி ஜனாதிபதி தனது தேசத்திற்கு சேவை செய்யும் பாதையில் இறுதி தியாகத்தை செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version