உலகம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் கூகுளின் அறிவிப்பு

Published

on

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் கூகுளின் அறிவிப்பு

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் உயிரிழந்ததை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

உலங்கு வானூர்தியில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மரணத்தை கூகுள் உறுதி செய்துள்ளது. அவரது பெயரை கூகிளில் தேடும் போது முன்னாள் ஜனாதிபதி என்றே காட்சிப்படுத்தப்படுகிறது.

பொதுவாக ஒரு ஜனாதிபதி உயிரிழந்தால் அல்லது பதவி விலகினால் கூகுள் தேடுதளத்தில் அது முன்னாள் ஜனாதிபதி என்று காட்டும்.

இவ்வாறான நிலையில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் காணாமல் போன நிலையில் அதன் சிதைவுகள் மீட்பு பணியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version