உலகம்

சீனா செல்லும் விளாடிமிர் புடின்

Published

on

சீனா செல்லும் விளாடிமிர் புடின்

சீன ஜனாதிபதி ஜின்பிங் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் புடின் நாளை (16.05.2024)) சீனாவுக்கு செல்வுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு நாட்கள் அங்கு தங்கும் அவர் ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாவது முறையாக பதவி ஏற்ற பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

குறித்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தெடர்பில் விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் உக்ரைனுக்கு எதிராக போர் முயற்சிக்கு பயன்படும் இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா ஏற்றுமதி செய்து மறைமுகமாக ரஷ்யாவுக்கு சீனா உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version