உலகம்

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Published

on

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர வதிவிட நிலையை அதிகரிப்பதே இதற்கான சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலானவர்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ள போதிலும் சிலர் தவிர்க்கப்படுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க் மில்லர் புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பதற்கான திட்டத்தை அறிவித்ததிலிருந்து முதல் முறையாக தனது மாகாண மற்றும் பிராந்திய அதிகாரிகளை அமைச்சர் சந்தித்துள்ளார்.

வீட்டுச் சந்தை மற்றும் பிற சேவைகள் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக குடியிருப்பாளர்கள் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிப்பதால், புதிய திட்டத்திற்கு அமைய அவர்கள், மாகாண குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதல் தேவையை உருவாக்கும் என பல அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக புதிய விசாக்களில் அமைக்க வேண்டிய வரம்புகளை அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

எதிர்வரும் நாட்களில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version