உலகம்

உலகின் ஆபத்தான நாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள இளவரசர் ஹரி

Published

on

உலகின் ஆபத்தான நாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரி(Henry Charles Albert David) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan) நைஜீரியாவுக்கு விஜயம் செய்துள்ளமையானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்தையும் ஹரி மற்றும் மேகன் தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் 12 ஆவது ஆபத்தான நாடக நைஜீரிய(Nigeria) சர்வதேச தரப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் ‘100,000 பேரில் 34 பேர் கொலை விகிதம் மற்றும் கடத்தல்களுக்கு வாய்ப்புள்ள நாடாக நைஜீரியா காணப்படுகிறது.

இந்நிலையில் ஹரியின் இந்த பயணம் பிரித்தானியாவில் பாதுகாப்பு தொடர்பில் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

நைஜீரிய தலைநகர் அபுஜா ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், பயணத் திட்டத்தில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனாவில் இராணுவத் தளம் சிவப்பு மண்டலமாக பார்க்கப்படுகிறது.

மேலும், சர்வதேச ரீதியில் மிகவும் ஆபத்தானது எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version