உலகம்

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

Published

on

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் 600 மதிப்பெண்களுக்கு 494 மதிப்பெண்கள்எடுத்துள்ளார்.

இவர், தான் 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என நினைத்திருந்ததால், அதற்கு மேல் வாங்க முடியவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார்.

அப்போது மாணவரின் பெற்றோர் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரை காணவில்லை. அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த கம்பம் காவல் நிலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்று மாணவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெற்றோர்கள் சந்தேகித்துள்ளனர்

Exit mobile version