உலகம்

காசாவுக்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்

Published

on

காசாவுக்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்

காசா(Gaza) போரானது சர்வதேச ரீதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் முக்கிய எல்லை பகுதியை இஸ்ரேல்(Israel) மீண்டும் திறந்துள்ளது.

கடந்த வார இறுதியில் காசாவின் முக்கிய எல்லை பகிடியான கெரெம் ஷாலோமை இலக்கு வைத்து ஹமாஸ் வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் அதிரடியாக மூடியது.

காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தன.

இந்த நிலையில் கெரெம் ஷாலோம் எல்லை பகுதியை இஸ்ரேல் மீண்டும் திறந்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. போரில் காசா நகரம் பாதிப்படைந்துள்ளதோடு இலட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.

எனினும் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையினால் மனிதாபிமான உதவிகளில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

Exit mobile version