உலகம்
Zero Balance Account கொண்ட பழங்குடி பெண் வேட்பாளர்!
சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு ரூபாய் கூட இல்லாத பழங்குடி பெண் வேட்பாளர் கவனத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பழங்குடி பெண் வேட்பாளர் தனது வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாதது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோர்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பைகா பழங்குடி பெண் வேட்பாளர் சாந்தி பாய் மராவி (33 வயது). இவர், தனது வேட்புமனுவில் தனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை எனவும் Zero Balance Account மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மாதரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இவரது வங்கிக் கணக்கிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் என 2000 ரூபாய் வந்துள்ளதையும் வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
மேலும், இவருடைய மொத சொத்து மதிப்பு 97 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ,12,000 செலுத்த வேண்டும் என்ற நிலையில் பழங்குடி மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து தான் செலுத்தியுள்ளார்.