உலகம்

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

Published

on

உக்ரைனின் கார்கில் நகரம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைனின்(Ukraine) இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா(Russia) ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியு்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆளில்லா விமானத் தாக்குதலில் கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்நிலையில் உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கீழே விழுந்த ஆளில்லா விமானங்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version