உலகம்
புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கும் அமெரிக்கா
புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கும் அமெரிக்கா
“சீனா (China) மற்றும் இந்தியாவில் (India) அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளதனால் தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை“ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ஜோ பைடன் இதற்காக தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் வோஷிங்டனில் (Washington) நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த பைடன்,
“சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும் (Japan), ரஷ்யாவும் (Russia), இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள்.
ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.
மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவில் (America) புலம்பெயர்ந்தோர்தான் எங்களை வலிமையாக்குகிறார்கள்
புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு அவர்கள் காரணமாக உள்ளார்கள்.
ஆனால், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் புலம்பெயர்ந்தோர்கள் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) புலம்பெயர்வு கொள்கைகளை விமர்சித்து வரும் நிலையில், ஜோ பைடன் புலம்பெயர்ந்தோர்களை ஆதரித்து பேசிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.