உலகம்

தென் சீனக்கடலில் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்

Published

on

தென் சீனக்கடலில் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்

தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக நேற்று(30.04.2024) தென் சீனக் கடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலைநேற்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை தாக்குதல் நடாத்தியது.

கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது. சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது.

சீன கடலோரக் காவல் படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.

Exit mobile version