உலகம்

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

Published

on

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு போருக்கே அவசியம் இல்லை என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 34 000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அதில், பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, போர் நிறுத்ததை கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council, UNSC) பலஸ்தீன ஆதரவு நாடுகளின் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ரத்து செய்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், தனது நட்பு நடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் (International Court of Justice) பிடியாணை பிறப்பிக்கப்படவிருப்பது தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

Exit mobile version