உலகம்

இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்

Published

on

இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்

காசா எல்லைப் பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலை அமெரிக்காவால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஃபா மீது தாக்குதல் முடிவைக் கைவிடும்படி இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தக் கேட்டுக்கொண்டார்.

ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அப்பகுதியில் இருந்து ஏராளமான பாலஸ்தீனர்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்றும், அது பாலஸ்தீன வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும் மெஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க இறுதி திட்டமாக ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version