உலகம்

செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

Published

on

செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

செங்கடல் வழியாக சென்ற ‘ஆண்ட்ரோமேடா ஸ்டார்’ என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரேயா அறிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலானது நேற்று(26) மேற்கொள்ளப்பட்டமையை அமெரிக்க இராணுவம் இன்று(27.04.2024) உறுதி செய்துள்ளது.

இதன்படி பிரிட்டனுக்கு சொந்தமான ‘ஆண்ட்ரோமேடா ஸ்டார்’ கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்.

இந்த தாக்குதலில் கப்பலுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version