உலகம்

உலகில் இலவச வைஃபையை வழங்கும் நாடு எது தெரியுமா

Published

on

உலகில் இலவச வைஃபையை வழங்கும் நாடு எது தெரியுமா

நவீனமயமாக்கப்பட்டு வரும் இந்த உலகத்தில், இலவச வைஃபை (WI-Fi) வழங்கும் முதல் நாடாக தாய்வான் பெயரிடப்பட்டுள்ளது.

தனது நாட்டு பிரஜைகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இவ்வாறாக தாய்வான் இலவச வைஃபையை வழங்கி வருகிறது.

இலவச வைஃபை வழங்குவதற்கான திட்டத்தை தாய்வான் அரசாங்கம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

“ஐதாய்வான்” (iTaiwan) எனும் பெயரில் தாய்வான் அரசாங்கம் இலவச பைஃவை திட்டத்தை ஆரம்பித்தது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது அரச அலுவலகங்கள், பொது போக்குவரத்து, சமய மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் மக்களுக்கு இலவச வைஃபை வழங்கப்படுகிறது.

தாய்வான் பிரிஜைகள் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்வதன் மூலம் இந்த இலவச வைஃபையை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

இதேமுறையில், தாய்வானுக்கு செல்லும் வெளிநாட்டவர்களும் ஐதைவான் திட்டத்தின் கீழ் இலசவ வைஃபையை பயன்படுத்தலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version