உலகம்

டிக்டோக் தடை குறித்த அமெரிக்காவின் சட்டம் : பதிலளித்துள்ள சீனா

Published

on

டிக்டோக் தடை குறித்த அமெரிக்காவின் சட்டம் : பதிலளித்துள்ள சீனா

டிக்டோக் (TikTok) செயலியை விற்கும் எண்ணம் இல்லை என டிக்டொக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனமானது, இதனை தனது உத்தியோக பூர்வ சமூக வலைதளம் ஒன்றில் பதிவேற்றியுள்ளது.

அமெரிக்காவில் (America) டிக்டொக்கை தடை செய்யப் போவதாகவும் அதன் பங்குகளை ஒன்பது மாத அவகாசத்திற்குள் விற்க வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பைட் டான்ஸ் நிறுவனம், மிகவும் பிரபலமான எமது காணொளி செயலியை விற்கவோ அல்லது அமெரிக்காவின் தடை உத்தரவை ஏற்கவோ தயாரில்லை.

மேலும் டிக்டொக்கை விற்பது தொடர்பில் வெளியான தகவல்கள் போலியானவை எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version