உலகம்

ரஷ்ய-உக்ரைன் போரின் நகர்வு: அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Published

on

ரஷ்ய-உக்ரைன் போரின் நகர்வு: அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

உக்ரைனுக்கு 6 பில்லியன் டொலர் பெறுமதியான நீண்ட கால இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் நேறையதினம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது இதுவரை உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளில் மிகவும் அதிக தொகைக்கு வழங்கப்படும் உதவி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் மூலம், உக்ரைனிய இராணுவத்திற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதில் ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான முக்கியமான இடைமறிப்பு ஆயுதங்கள், குறிப்பிடத்தக்க அளவு பீரங்கி வெடிமருந்துகள் உட்பட்ட ஆயுதங்கள் அடங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த புதன்கிழமை உக்ரைனுக்கான 95 பில்லியன் டொலர் கூடுதல் உதவிப் பொதியில் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து அமெரிக்க பங்குகளில் இருந்து உக்ரைனுக்கு விரைவாக உபகரணங்களை வழங்கும் 1 பில்லியன் தொகுப்பை அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version