உலகம்

ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் இறுதி திட்டம்

Published

on

ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் இறுதி திட்டம்

ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி குறிக்கோளாக காசாவின் ரஃபா நகரை நிரணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு காசாவில் உள்ள இந்த ரஃபா நகரம் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஹமாஸுக்கு எதிரான போர் ரஃபாவிற்குள் நுழையாமல் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ஆனால், ரஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் மிக மோசமான சூழலை உருவாக்கும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

கடந்தாண்டு ஆரம்பித்த இஸ்ரேல் காசா யுத்தத்தால் இதுவரை பல லட்சம் பேர் காசாவில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அப்படி வெளியேறியவர்களில் பல லட்சம் பேர் ரஃபாவுக்கு தான் சென்றுள்ளநிலையில் ரஃபாவில் தாக்குதல் நடந்தால் அது மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ரஃபா மீதான தாக்குதல் திட்டத்தைப் பொதுவெளியில் சொல்லி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இப்போது அங்கு இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸை முற்றிலும் ஒழிப்பதையே இஸ்ரேல் தனது இலக்காக வைத்துள்ளது. நான்கு ஹமாஸ் பட்டாலியன்களின் தாயகமாக ரஃபா உள்ளது.. இதன் காரணமாகவே இஸ்ரேல் ரஃபா நகரைத் தாக்குவதில் குறியாக இருக்கிறமை சுட்டிக்காட்டத்தக்கது.

Exit mobile version