உலகம்

ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் கைது

Published

on

ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் கைது

ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் கைது ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் திமூர் இவானோவ், (Timur Ivanov) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரியளவில் இலஞ்சம் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இரண்டு மாத காலம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இராணுவ கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்த 48 வயதான ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர், பணியில் இருக்கும் போது தனிப்பட்ட இலாபத்திற்காக ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Exit mobile version