உலகம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்ட சிறுவன் கைது

Published

on

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்டசிறுவன் கைது

பாரிஸில் (Paris) நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில்(Olympics) “வீர மரணம் அடைய விரும்புகிறேன்” என்று கருத்தினை தெரிவித்ததாக கூறப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் “வீர மரணம் அடைய விரும்புகிறேன்” என்று கருத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் வெடிபொருள் அணிந்து தற்கொலை தாக்குதல் தாரராக மாறுவதற்கான திட்டத்தை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தற்கொலை தாக்குதல் கருத்தினை நேற்று முன்தினம்(23) டெலிகிராமில் பதிவிடப்பட்ட நிலையில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சிறுவனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இஸ்லாமிய அரசை ஆதரிப்பதாக சிறுவன் கையால் எழுதிய காகிதங்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்புகளை தூண்டும் இந்த விளையாட்டு நிகழ்வுக்கு முன்னதாக அதிகரித்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics)உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஈர்க்கிறது, எனவே இது தாக்குதல்களுக்கான முதன்மை இடமாகவும் அமைந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனின் வயது காரணமாக பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் அவரது பெயரை வெளியிடவில்லை என்பதுடன் பொலிஸ் பாதுகாப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்குபடுத்தும் குழுவினர், அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version