உலகம்

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி

Published

on

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி

காசா பகுதியில் உள்ள கான் யூனிஸின் மருத்துவமனை வளாகத்தில் பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கான் யூனிஸில் உள்ள அல் ஷிஃபா மற்றும் நாசர் மருத்துவமனை மைதானத்தில் அமைந்துள்ள இந்த புதைகுழியில் 283 சடலங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் சோதனையில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறிய பின்னரே இவ்வாறு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதைக்கப்பட்ட சரியான திகதி மற்றும் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வாக்கர் டர்க், இது மிகவும் ஆபத்தான சம்பவம் என்று கூறியுள்ளார்.

மேலும் சடலங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version