உலகம்

கனடாவில் மோசமடைந்து செல்லும் வருமான ஏற்றத்தாழ்வு

Published

on

கனடாவில் மோசமடைந்து செல்லும் வருமான ஏற்றத்தாழ்வு

கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை மோசமடைந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அதிகளவு வருமானம் ஈட்டுவோருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டுவோருக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இடைவெளி கடந்த ஆண்டில் அதிகளவில் உயர்வடைந்துள்ளதோடு, உயர் வட்டி வீதங்கள் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் செலவிட நேரிட்டுள்ளது.

மேலும், செல்வந்தர்களின் சொத்துக்கள் காரணமாக வருமானம் அதிகளவில் கிடைக்கப் பெறுவதாகவும், குறைந்த வருமானம் ஈட்டுவோரது வருமானம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதிக வருமானம் ஈட்டுவோரின் வருமானம் 6 வீதமாக அதிகரித்துள்ள அதேவேளை, குறைநத் வருமானம் ஈட்டுவோரின் வருமானம் வெறும் 0.3 வீதத்தினால் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version