உலகம்

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

Published

on

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துவரும் புடின், அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக கடந்த மாதம் மிரட்டல் விடுத்தார்.

எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்கள் உட்பட எந்த ஆயுதங்களையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

இந்நிலையில், அமெரிக்க அறிவியலாளர்களின் ஆய்வமைப்பு ஒன்று, ரஷ்யாவிடம் 5,977 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், புடின் தான் மிரட்டியதை செய்யக்கூடியவர்தான் என்றும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருக்கும் கண்டன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். அப்படி ரஷ்யாவிலிருந்து அந்த ஏவுகணைகள் பிரித்தானியாவை நோக்கி ஏவப்படும் நிலையில், அவை 20 நிமிடங்களில் லண்டனைத் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவை நோக்கி வீசப்படும் ஏவுகணைகள், 30 நிமிடங்களில் அமெரிக்காவைச் சென்றடைந்துவிடுமாம்!

Exit mobile version