உலகம்

பாலஸ்தீனத்துக்காக பழிவாங்க இளம்பெண்ணைக் கடத்தி சீரழித்த நபர்: பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

Published

on

பாலஸ்தீனத்துக்காக பழிவாங்க இளம்பெண்ணைக் கடத்தி சீரழித்த நபர்: பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

பிரான்சில், யூத இளம்பெண் ஒருவரைக் கடத்தி வன்கொடுமை செய்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தனது செயல்களுக்காக அவர் அளித்துள்ள தன்னிலை விளக்கம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் புறநகர்ப்பகுதியான Gennevilliers என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் 32 வயது நபர் ஒருவர், யூத இளம்பெண் ஒருவரைக் கடத்தி வன்புணர்ந்துள்ளார்.

செய்த பயங்கர குற்றம் போதாதென்று, தான் பாலஸ்தீனத்துகாக பழிக்குப் பழி வாங்குவதற்காகவே அந்தப் பெண்ணை சீரழித்ததாக விளக்கமளித்துள்ள விடயம் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, கடத்தல், வன்புணர்தல், கொலை மிரட்டல் விடுத்தல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல நாட்களாக அந்த அந்த இளம்பெண்ணைப் பிடித்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்திவந்த அந்த நபர், அந்தப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்போவதாக அந்த இளம்பெண்ணின் தாய்க்கு மிரட்டல் செய்திகளும் அனுப்ப, அவரது மொபைலை ட்ராக் செய்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

Exit mobile version