உலகம்

உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினத்தில் 6.8 சதவீதம் அதிகரிப்பு., 4வது இடத்தில் இந்தியா

Published

on

உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினத்தில் 6.8 சதவீதம் அதிகரிப்பு., 4வது இடத்தில் இந்தியா

2023-இல் உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினம் 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில், உலகின் அனைத்து நாடுகளின் பாதுகாப்புச் செலவு 2443 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் 7,29,96,880 கோடிகள்) என Stockholm International Peace Research Institute (SIPRI) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது 2022-ஆம் ஆண்டின் செலவை விட 6.8 சதவீதம் அதிகமாகும். மேலும், தொடர்ந்து 9-வது ஆண்டாக உலக பாதுகாப்புச் செலவீனத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIPRI அறிக்கையின்படி, 2023-இல் நாட்டின் பாதுகாப்பிற்காக அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதையடுத்து,இப்பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் இந்தியா அதன் பாதுகாப்புப் படைகளுக்கு 83.6 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.25,00,000 கோடி) செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற நாடுகள் 2.5% செலவழிக்கும் போது இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% மட்டுமே பாதுகாப்புக்காக செலவிடுகிறது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக அமைதி மற்றும் ஒழுங்கு சீர்குலைந்ததை அடுத்து அனைத்து நாடுகளும் ராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளன.

அனைத்து நாடுகளும் ஆயுதங்களை குவிப்பதில் போட்டி போட்டு விலையை அதிகரித்து வருகின்றன.

Exit mobile version