உலகம்
சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா – குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் அதன் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் பாதுகாப்பிற்காக படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
குவாங்டாங்கின் பெரும்பகுதி டெல்டா (Delta) நதியின் ஒரு பகுதி என்பதால் இது கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் அலைகள் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையிலேயே, ஏறத்தாழ 110,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 25,800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில பாடசாலைகளை மூடுவதற்கும் சீன அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது.