உலகம்

மாலைதீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து

Published

on

மாலைதீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து

மாலைதீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-2018 வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டதோடு தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, மறு விசாரணைகள் தொடர்பில் திகதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version