உலகம்

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை

Published

on

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்துமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

1871 ஆம் ஆண்டு இவ்வாறு வெடித்த எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிமலையைச் சுற்றி வசித்த சுமார் 11,000 மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்ப வேண்டியிருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனுடன் தற்போது எரிமலை வெடித்து எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் எந்நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ள ருவுங் எரிமலை இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி பகுதியில் உள்ள ஒரு தீவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version